உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

நாள்காட்டி ஆனவனே! ஊழ்காட்டி வானவனே! நற்றமிழுக் குற்ற மைந்தா!

சிப்பந்தி கண்டவனே! சம்பந்தி கொண்டவனே! செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே!

9) செங்கீரை ஆடி அருளே!

மாதரெலாம் அடிமையெனும் போதனையில் தமிழகமே மயக்கத்தில் வீழ்ந்த போது

மாருதமாய் வந்துதமிழ்ச் சாரதியாய் நின்றினிய மகளுக்குத் தமிழ்கற் பித்து

வேதனைகள் தீர்த்துபல சோதனைகள் தீர்த்துதமிழ் வெற்றிஆ சிரியை ஆக்கி

வியனுலகில் மாதர்களும் பயனுடைய தொழில்புரிய வீரமுடன் பாதை போட்டுக்

காதலொரு ரெங்கனையே நாதனெனக் கொண்டதனால் கண்ணியமாய் மணமு டித்துக்

கலைகொண்ட தமிழ்க்காதல் நிலைகொள்ள வைத்ததனால்

கனவுக்கு வந்த நனவே!

சீதனமாய் வந்தவனே! சாதனைகள் தந்தவனே!

செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே!

10)செங்கீரை ஆடி அருளே!

நாள்காட்டி = காலண்டர்.

=

வானவன் = அமரன்.

25

அச்சகம் வைத்ததனால் அடிகளுக்குப் பல சிப்பந்திகள் இருந்தார்கள்.

அடிகள்

தன்

மகள் நீலாவுக்குத் தமிழ் கற்பித்துத் தமிழாசிரியை ஆக்கி, அவளது காதலர் திருவரங்கம் பிள்ளைக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துக் காதல் கனவை நனவாக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/50&oldid=1594939" இலிருந்து மீள்விக்கப்பட்டது