உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

3. தாலப் பருவம்

ஆயக் கட்டில் ஞாயம் கெட்டால்

அரிவாள் கொண்டேந்தி

ஆணித் தரமாய்க் காணிச் சண்டை ஆளுக் காள்போட்டுக்

காயம் பெற்று நேயம் கெட்டுக்

கன்னிப் போனோர்க்குக்

கன்னித் தமிழை எண்ணிப் பாடம்

கற்பித் ததனாலே

தேயம் முற்றும் மாயம் செற்றுத்

தேசாந் திரியாகித்

தேனும் பாலும் சிவமும் தமிழும்

சேரச் செய்தோனே!

தாயத் தமிழில் நேயத் தலைவா!

தாலோ தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

1) தாலோ தாலேலோ!

சிங்கத் திறனும் சங்கத் தமிழும்

சேரும் கூட்டாகிச்

சேவை செய்தே தேவை கூடச்

செல்வம் கழிவாகி

வரப்புச் சண்டை போடும் தமிழர்கட்குத் தனித்தமிழின் பெருமையை உணர்த்தியவர் அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/51&oldid=1594940" இலிருந்து மீள்விக்கப்பட்டது