உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் அங்கப் பொலிவும் சங்கக் குரலும்

அன்பர் பெருக்காகி

ஆளின் கூட்டம் தமிழின் ஏற்றம்

ஆயும் வகுப்பாகி

எங்கும் சைவம் எதிலும் தமிழே

என்னும் முழக்காகி

ஏற்றம் கொள்ளத் தோற்றம் செய்தே

ஏசல் தீர்த்தோனே!

தங்கத் தமிழில் சங்கத் தலைவா!

2)

தாலோ தாலேலோ!

தமிழர் மறையின் மலையே அழிழ்தே! தாலோ தாலேலோ!

மண்ணோர் ஏற்றி விண்ணோர் போற்றி

மயங்கத் தமிழ்பேசி

மாலை சூடி ஓலை தேடி

மனனம் பலசெய்து

நண்ணார் கூட நண்ணும் படியாய்

நன்மை பலவாக்கி

நாளுக் கொருநூல் ஆளுக் கொருநூல்

நயமாய் அச்சிட்டே

அண்ணா மலைப்பல் நகரில் பேசி

ஆர்வ விளக்கேற்றி

அன்னைத் தமிழுக் கென்றே பலரை

ஆசான் ஆக்கியதால்

27

சிங்கத்தின் ஆற்றலும் சங்கத்தின் தமிழும் தனக்கெனக் கொண்டு அடிகள் சேவை செய்ததால் செல்வம் குறைந்தது. அன்பர் கூட்டம் பெருகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/52&oldid=1594941" இலிருந்து மீள்விக்கப்பட்டது