உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் - 34

தண்ணார் தமிழின் தலைவா! அமிழ்தே! தாலோ தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

3) தாலோ தாலேலோ!

செக்கின் மாடாய் முக்கி முனகிச் சேற்றில் உழல்மக்கள்

செம்மாத் தோங்கிப் பெம்மான் போற்றிச் சேர வழிசெய்து

கெக்கின் தலையில் வெண்ணைய் வைத்துக் கொண்டல் மொழிபேசிக்

கூற்றை வென்று நாற்றாய் நின்று

கூத்தன் பதம்பாடிச்

சுக்கின் முதலாம் அக்கா லத்தமிழ்ச்

சூரண மருத்துவங்கள்

சொல்லி வளர்த்துப் பள்ளி அமைத்த

சோதி மருத்துவனே!

தக்கார் பலரில் மிக்கோன் ஆனாய்!

4)

தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! தாலோ! தாலேலோ!

வாசப் பலவின் வேசை ஈபோல்

வாழும் உலகத்தில்

வானத் தவரும் மோனத் தவரும்

வாழ்த்தும் படியாகப்

பாசத் தமிழும் தேசத் தவரும்

பல்கிப் பொலிவாகப்

பட்டி தொட்டி நாடு முற்றும் பவனி வந்தோனே!

நண்ணார் = பகைவர்

தமிழ் மருத்துவத்தை ஆதரித்தவர் அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/53&oldid=1594942" இலிருந்து மீள்விக்கப்பட்டது