உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் நாசம் செய்தோர் ஈசல் போல

நாட்டில் வந்தாலும்

நற்றாய் மொழியால் செற்றே அவரை

நலியச் செய்தோனே!

தாசர் பலரின் ஆசான் ஆனாய்!

தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

5) தாலோ! தாலேலோ!

ஆனைப் போரும் சேனைப் போரும்

அஞ்சா மற்செய்தே

ஆற்றல் காட்டிக் கூற்றை ஓட்டி ஆர வாரித்தே

தேனை வென்று மானை வென்ற

தென்றல் மொழிபேசித்

திக்கெல் லாமும் அக்கா லத்தில் தீரங் கள்காட்டி

வானை வென்றே ஏனை உலகும் வாழ்த்தப் புகழ்பெற்ற

வற்றாத் தமிழர் அற்றார் ஆனார்.

வாட்டங் கள்தீர்த்த

தானைத் தலைவா! சேனைப் புலவா!

தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

6)

தாலோ! தாலேலோ!

29

மறைமலை அடிகளின் வாரிசான மாணவர் பலர் உண்டு. அடிகள் நாடு முற்றும் பவனி வந்து ஈசல் போல முளைத்த நாசகாரக் கும்பலைச் சொல் வன்மையால் அழித்தார்.

அக்காலத்தில் வீரப்போர் புரிந்து ஈரத் தமிழ் பேசி மூவுலகும் புகழ் வாழ்ந்த தமிழர்கள் தாழ்ந்தபொழுது வாட்டம் தீர்த்தவர் மறைமலை அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/54&oldid=1594943" இலிருந்து மீள்விக்கப்பட்டது