உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் -34 *

74

சான்றவ நின்றன் பேரறிவால்

சாற்றிய 1பொருந்தும் உணவன்றிச் சற்றும் பொருந்தா உணவுசெயேம் சற்றே பொறுத்தல் ஆகாதோ ஆன்றரு நறுநெய்ப் பண்ணியமும்

அன்றித் 2தெங்கின் பாற்குழம்பும் அருமிள கின்சா றும்பிறவும்

ஆக்கிப் படைப்பேம் ஒருநொடியில் வான்றரு நன்கொடை பொய்த்திடினும் வற்றா தென்றும் உலகூட்டும் வளமார் பொன்னி முதல்யாற்றின் வளருஞ் செந்தமிழ் நன்னாட தேன்றரு சுவைமிகு தமிழ்தரு மெஞ் செம்மல் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. பொருந்தும்... - “பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்” அடிகளார்

நூல்.

2. தெங்கின்...

தேங்காய்ப் பாற்குழம்பும் மிளகு சாறும் அடிகளார் விரும்பியுண்பன வாகலின் இங்ஙனம் கூறினர் சிறுமியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/323&oldid=1595212" இலிருந்து மீள்விக்கப்பட்டது