உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மறைமலையம் -34 *

76

கட்டிய மாளிகை ஒன்றோநின்

கருத்தைப் பரப்பும் நோக்குடைய கல்விக் கழகம் கலைமன்றம்

கருத்துயர் நூல்நிலை யங்களெனப் பட்டியல் நீளப் பலபலவாய்ப்

பாங்குற விளங்குவ வுளவலவோ பச்சிள மகளிர் எம்மனைதான் பாதைக் கிடையூ றாயினதோ

கிட்டிய யாக்கையும் அறிவுணர்வும் கேடுறு வித்தும் விழைவூட்டும் கீழ்மைக் குடியும் இழிசூதும்

கேடுறு மாறே துணிவுகொடு

திட்டந் தீட்டிய தமிழ் நாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

பாதைக்கிடையூறு என்று தலைக்கீடு காட்டிச் சிற்றிலை அழிக்கப் பாட்டுடைத் தலைவன் முனையச் சிறுமியர் கூறியது இப் பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/325&oldid=1595214" இலிருந்து மீள்விக்கப்பட்டது