உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் -34 *

78

கலைமன் றமெனப் பொலிவுறவே கவினுறு கூடம் உயர்மாடம் 1காலதர் பிறவும் திகழ்தருநின்

2கழகப் பெருமா ளிகையேபோல் நிலைபெறு வளமனை யாங்குயிற்ற நின்போல் எமக்கும் எளிதேயோ நிறைவில தேனும் மணல்வீடு நின்பால் அன்பு குறைந்தேமா

அலைகடல் கொண்ட 3குமரியெனும் அற்றை மாந்தன் பிறந்தகமாம் ஆங்கதன் எச்சம் எனநிற்கும்

அருமைச் செந்தமிழ் நன்னாடா 4சிலைகொள உயரிய நாகைக்கண் திகழ்வோய் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. காலதர் - வளிவாய் (ஜன்னல்).

2. கழகம் பொதுநிலைக் கழக மாளிகை.

3. குமரியெனும்... - கடலில் மூழ்கிய குமரிப் பெருநிலமே மாந்தன் (முதலில்) பிறந்தக மென்பதும், அதன் எச்சமே இற்றைத் தமிழ்நாடென்பதும் அறிஞர் கருத்து.

4. சிலை

நாகையில் அடிகளாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/327&oldid=1595216" இலிருந்து மீள்விக்கப்பட்டது