உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

79

குயிலொடு மாறு கூவினமால்

குரிசில் நின்றன் தீங்குரலைக் குறித்துப் பகடி பண்ணுகிற

குறிப்பால் அங்ஙன் செய்திலமால் பயில்தமிழ்ப் பெரும தோல்விகொடு பறந்தோ டியவம் 'மழகுயிலைப் பார்த்துச் சிரித்ததும் ஒரு பிழையாய்ப் பாராட் டுவதும் அழகாமோ எயில்முதல் அரணம் செய்தினிதே இன்றமிழ் 2மன்றம் கண்டுநனி ஏற்றம் பொலியப் பெருமிதமாய் இரும்புகழ் 3வேந்தர் ஆட்சிசெயச் 4செயிரறு செந்தமிழ் நன்னாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட்

செல்வா சிற்றில் சிதையேலே!

303

குறிப்புரை :

சிறுமியர் குயிலுக்கு மாறாய்க் கூவிச் சிரித்தனராகப் பாட்டுடைத் தலைவன் தன்னைப் பகடி செய்ததாக வெகுண்டனன் என அமைந்தது இப் பா.

1. மழகுயில் - இளங்குயில் - 'மழவும் குழவும் இளமைப் பொருள' - தொல். 2. மன்றம் – தமிழ்க்கழகம்.

3. வேந்தர் – பேரரசர்.

4. செயிரறு - குற்றமற்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/328&oldid=1595217" இலிருந்து மீள்விக்கப்பட்டது