உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மறைமலையம் -34 *

80

அருமைத் தமிழின் நிலைகுலைய அயலவர் குழுமிச் சூழிடமோ அன்றிச் சிவனியத் திருநெறியை அழிப்பவர் கும்பல் வாழிடமோ பெருமன் பதையின் நலந்தீய்க்கும் பேதைமை யாளர் குடியிருப்போ பெண்பா லவர்எம் சிறுவீட்டைப் பெரியோய் சிதைத்தல் முறையாமோ அருள்நெறி யென்னும் தந்நெறியால் அந்தமிழ் மக்களை உய்வுசெய அயல்நாட் டினினின் றீண்டுற்ற

ஆன்றவர் போப்பு முதலோரைத்

1தெருளுறு வித்த தமிழ்நாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. தெருள்

தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/329&oldid=1595218" இலிருந்து மீள்விக்கப்பட்டது