உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் -34 *

82

மன்புலவன் என்றுலகு போற்றுதிரு வள்ளுவன்

மன்பதை நலந்தழைப்ப

மனங்கொடு வழங்கியருள் பொதுமறைக் குரை'செய்து

மன்னுபரி மேலழகியன்

தென்புலத் தார்க்குப் பொருத்தமில் லாதே

தெரித்தவுரை திரிபுகண்டு

தெளிவுமிகு சான்றுகள் வலிவா யிலங்குறத் திறவோர் வியந்துபோற்றத்

தன்புலமை யேயன்றி நிகரொன் றிலாப்பெருந்

தகைநறுந் தண்டமிழினால்

தக்கவாறா ராய்ந்து 2வாய்மொழியின் நன்பொருள் தமிழுலக முணருமாறு

3தென்புலத் தார்யாவர் என்றெழுதி யருள்கையாற் சிறுபறை முழக்கியருளே!

செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை முழக்கியருளே!

குறிப்புரை :

1. செய்து – காரண வினையெச்சம்.

2. வாய்மொழி - திருக்குறள்.

3. தென்புலத்தார்... - ‘தென்புலத்தார் யாவர்' என்பது அடிகளாரின் நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/331&oldid=1595220" இலிருந்து மீள்விக்கப்பட்டது