உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

307

83

கருத்தொன்ற இறைவனைத் திருவுருவி னிற்கண்டு கனிவுமிகு தமிழில்பரவிக்

கைதொழுது வையகம் மெய்யுணர்ந் தின்புறக்

கட்டிய திருக்கோயிலில்

கருத்தினிய` நீள்குழன் மாதரை இறைமைக்

கலைப்பணிகள் செய்யுமாறு

கருதிய பழங்கொள்கை பழுதுபட ஆங்கவர்

கணிகையர்க ளாயிழிதலின்

பொருத்தமில் லாதவப் புன்மைநிலை யின்வரும் பொல்லாங்கு கண்டுநைந்து

பொதுமகளிர் இறைவனுக் கடியவர் எனும் பெயரில் பொட்டணிதல் விட்டொழித்துத்

திருத்தமுறு மாறுநற் றிட்டம்? வகுத்தவன்

சிறுபறை முழக்கியருளே!

செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை முழக்கியருளே!

குறிப்புரை :

1. இனிய

காட்சிக்கினிய.

2. திட்டம் - திருக்கோயிலில் பொதுமகளிர் பொட்டணியும் வழக்கை ஒழிக்க வேண்டும் என்பது அடிகளாரின் சீர்திருத்தக் கொள்கைகளுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/332&oldid=1595221" இலிருந்து மீள்விக்கப்பட்டது