உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம் -34 *

86

(வேறு)

கத்து கருங்கடல் நீரை முகந்து

கடுகிவிண் மீதேறிக்

கருமுகிற் கூட்டம் பெருக முழங்கிக்

கனலுங் கோடையற

மெத்தவும் வாடிய பயிர்களும் மண்ணில் மேவிய பிறவுயிரும்

மேன்மையில் வறுமை நீங்கித் தழைய மேற்பொழி மாரியென

முத்தமிழ் அவையின் தலைமைப் பெரியோய் மொழிமழை பொழியுங்கால் மொழிநலம் ஓம்பார் எவரே யாயினும் 1மதியேம் எனமிசையில்

குத்து மணிக்கையி னிற்ிகுணில் கொண்டு கொட்டுக சிறுபறையே!

கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக சிறுபறையே!

குறிப்புரை :

1. மதியேம்... - கரந்தை தமிழ்க் கழகத்தில் தனித்தமிழ்ப் போராட்ட நிகழ்ச்சி.

2. குணில் - பறையடிக்குங் குறுந்தடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/335&oldid=1595224" இலிருந்து மீள்விக்கப்பட்டது