உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் -34 *

88

வடமொழி முதனூல் கண்டு வகுத்த

வழிநூல் அல்லாது

வண்டமிழ் முதனூல் அன்றுமெய் கண்டான் வழங்குமெய் நூலென்று

திடமாய்ச் சொல்லியும் நம்பியும் வந்தோர்

திகைப்பத் தெளிவுகொளத்

திப்பிய புலமையின் ஆய்ந்துமெய் கண்டு திகழ்தமிழ் முதனூலே

சுடர்பே ரறிவன் 2கன்னற் பெருவயல் சூழ்பெண் ணாகடவூர்

3தோன்றல் செய்மெய் நூலென வயிரத் தூண்போல் நிலைநாட்டி

முடமுறு தமிழர் அறிவு நிமிர்த்தோய் முழக்குக சிறுபறையே!

மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக சிறுபறையே!

குறிப்புரை :

1. திப்பிய – செறிந்த.

2. கன்னல் - கரும்பு - இக்கால் பெண்ணாகடத்தில் கரும்பாலை அமைக்கப்

பெற்றுள்ளது.

3. தோன்றல் - மெய்கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/337&oldid=1595226" இலிருந்து மீள்விக்கப்பட்டது