உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

89

1நறையுறு தமிழில் வடமொழி யதனில் நாளும் பெருகிவளர்

நாற்றிசை யாளும் ஆங்கில மொழியில்

நவிலும் பிறமொழியில்

துறைதுறை தோறும் அறிஞர்கள் யாத்துத் துலங்குபல் லாயிரநூல்

துருவித் துருவி யாய்ந்து படித்தே துய்த்தவை யுலகு பெற மறைமலை யடிகள் நூல்நிலை யமென

மன்னிச் சிறந்தொளிரும்

2மணிமொழி நூல்நிலை யந்தரு வள்ளால்

மற்றொரு பற்றின்றி

முறையுற இறையடி பரவிய பெரும

முழக்குக சிறுபறையே! மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக சிறுபறையே!

313

குறிப்புரை :

1. நறை தேன்.

2. மணிமொழி நூல்நிலையம் மணிமொழி நூல் நிலையமென அடிகளார் நிறுவியதே இந்நாள் அவர்கள் விருப்ப ஆவணப்படி மறைமலையடிகள் நூல்நிலையமென விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/338&oldid=1595227" இலிருந்து மீள்விக்கப்பட்டது