உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

  • பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

10. சிறுதேர்ப்பருவம்

91

1கருதினிய 2பல்லியத் துறுபெரு முழக்கமும் கனிவுமிகு பண்சுமந்த

கடவுட் பழந்தமிழ்ப் பாமுறை முழக்கமும் காதல்வளர் தொண்டுக்குழாம்

3வருதினிப் பெருமறவர் அணிவகுப் பெனவுடன் வந்துதமிழ் அருமைபேசி

வாயார வாழ்த்துறு முழக்கமும் ஓங்கவெழில் வண்ணமண மாலைபொலிய

அருகினில் 'உமாமகே சுரன்5அரங் கன்போலும் 6ஆண்டகையர் சூழ்ந்துபோத

அணிபெற்ற மகிழுந்தில் இனிதுவீற் றருளிநல் அருந்தமிழ் நாட்டகத்துத்

தெருவினி லெலாமுலா வருகைதரு பெருமகன் சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

315

குறிப்புரை :

1. கருதினிய கருது + இனிய.

2. பல்லியம்

இசைக்கருவிகள் (Archestra).

3. வருதினி - போர்ப்படை.

Nơi cÓ CÓ

உமாமகேசுரன் உமாமகேசுரனார்.

5. அரங்கன் – திருவரங்கனார்.

6. ஆண்டகையர் பொன்னரசு (கனகராயர்) முதலிய அணுக்கத் தொண்டர்களும், பா.வே.மாணிக்கனார், கா. சுப்பிரமணியனார். திரு.வி. கலியாணசுந்தரனார் முதலிய பேரறிஞர்களும் இளவழகனார், சோம சுந்தர பாரதியார் முதலிய மாணவர்களும் இன்னோரன்ன பிறரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/340&oldid=1595229" இலிருந்து மீள்விக்கப்பட்டது