உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் -34 *

94

நடமாடு மெய்க்கோயில் என்றலால் இறைவனின்

நல்லருட் கொடையாதலால்

நண்ணுற்ற விம்மைக்கும் மறுமைக்கும் ஆதரவு நன்னிலைய மென்னுமாற்றால்

உடனலம் பேணியினி தொழுகுநெறி யும்பொருந்(து) உணவுகொள் முறையும்மற்றும்

உற்றநோய் களைதலும் நற்றவம் பயிறலும் உரைக்குமிவை முதலானவும்

சுடர்கின்ற தமிழினில் வாழ்வியல் முறைகள் சுட்டுமுயர் பெருநூலெனச்

சூழ்ந்துலகு பாராட்டு பெருமைமிகு மக்களுயிர் 'நூறாண்டு வாழ்க்கைதந்து

திடமான மெய்ப்புகழ் கொண்டிலகு பெருமகன்

சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வு பெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

குறிப்புரை :

1. நூற்றாண்டு... - “மக்கள் நூறாண்டுயிர் வாழ்க்கை”

அடிகளார்நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/343&oldid=1595232" இலிருந்து மீள்விக்கப்பட்டது