உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மறைமலையம் -34 *

96

செழித்துவளர் மேலைநாட் டொள்ளியர்கள் மேன்மையுஞ் செந்தமிழ் 1வைப்பிருந்துஞ்

சீரழிவு பட்டநந் தமிழர்தங் கீழ்மையுஞ்

சீராய் எடுத்துரைத்துப்

பழித்தறி வுறுத்துநற் பான்மையை யுணர்கிலார்

பகையான் மறுத்தெதிர்க்கப்

பார்த்துளம் வேர்த்தா ரோடை கிழாரெனும் பட்டறிவு மிக்கபெரியார்

கொழித்தபே ரறிவாளர் மறைமலை யடிகளார் கூற்றெலாஞ் சரியேயெனக்

கூறிய மறுப்பினை நூறினர் 3மறுப்புநூல் கொண்டெதிர்த் தவரைவீழ்த்தத்

தெழித்தமறு தலையரும் போற்றுமுயர் சீராள

சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

குறிப்புரை :

1. வைப்பு - பொருள் வைப்பு.

2. பெரியார் ஈ.வெ.இராமசாமி.

கண்டனஞ்

3. மறுப்பு நூல் மறுப்புக்கு மறுப்பு அடிகளாரின் தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் என்னும் கட்டுரையை ஒருசாரார் செய்தமையால் அக் கண்டனத்தைக் கண்டித்துப் பெரியார் வெளியிட்டநூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/345&oldid=1595234" இலிருந்து மீள்விக்கப்பட்டது