உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

321

97

தடைசெய்க வென்றுபகை நடைகொண்ட கடையவர் தருக்கித் தலைநிமிர்த்தித்

தகைமாண்ட சீர்த்தியின் அறிவுரைக் கொத்துதரு 1தண்டமிழ்த் தாய்ச் சுட்டலும்

2கிடைகொண்ட தொழிலினர் விரகார்ந்த சூழ்வினிற் கிளைத்துவரு விளைவாயவர்

கிண்டலின் எழுந்தவார்ப் பாட்டங்கள் யாவுங் கிளர்ந்தெழு பெருங்காற்றினால் உடைபடச் சிதறியொழி 3கொண்மூக் குழாமென உருவிலா தேயொழிந்த

ஓவா முயற்சியின் தாவாத பேரறிவின் ஒண்டமிழின் மாசுபோக்கிக்

4கிடையுற்ற எம்மவரை யார்த்தெழச் செய்தவன்

சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

குறிப்புரை :

1. தண்டமிழ்த்தாய் அடிகளாரின் ‘அறிவுரைக் கொத்து' என்னும் நூலிலுள்ள 'தமிழ்த்தாய்' என்னும் கட்டுரையைப் பாடத்தில் வையாது தடை செய்க வென்று ஒரு சாரார் ஆரவாரஞ் செய்தனர்.

2. கிடை - வேத மோதுங் கூட்டம்.

3.

கொண்மூ கருமுகில்.

4. கிடையுறல் மடிந்து கிடத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/346&oldid=1595235" இலிருந்து மீள்விக்கப்பட்டது