உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

மறைமலையம் -34 *

98

கற்றோர் உவப்புறப் பலவகைச் செய்திகொடு காலமுறை யிற்போந்தவர்

கையுறுந் தாளிகைத் துறையினில் எம்மனோர்க்1 கைதூக்கி மேம்படுத்தச்

2சிற்றூர் அடைத்துநற் 3சித்தாந்த தீபிகை

சீறுற விளக்கிமற்றும்

4செந்தமிழ் வைப்புபே 5ரறிவுக் கடலிவை சீர்த்திசால் தமிழ் மொழியினும் மற்றாங் கிலத்தினிற் கீழைநாட் டுள்ளநன் மக்கள் கவர்ச்சிபெரிதும்

மாண்புறத் தந்தினிது சேண்புகழ் கொண்டனை மணிநடையில் இற்றைநாளில்

செற்றார் கலங்கவரு 7தாளிகை வழிகாட்டி

சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

குறிப்புரை

1. எம்மனோர் - உயர்திணை இரண்டன் தொகை.

2. சிற்றூர் - சித்தூர்.

3. சித்தாந்த தீபிகை

4. செந்தமிழ் வைப்பு

இருந்த மாதவிதழ்).

அடிகளார் ஆசிரியராக இருந்த மாதவிதழ்.

-

செந்தமிழ்க் களஞ்சியம் (அடிகளார் ஆசிரியராக

5. அறிவுக் கடல் - அடிகளார் நடத்திய 'ஞானசாகரம்' எனும் இதழின் பெயர் அடிகளாரால் ‘அறிவுக்கடல்' எனத் தமிழாக்கம் செய்யப்பட்டது.

6. ஆங்கிலத்தினிற்... - The Oriental Mystic Myna.

7. தாளிகை - தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழம், செந்தமிழ்ச் செல்வி முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/347&oldid=1595236" இலிருந்து மீள்விக்கப்பட்டது