உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் பித்துக் கொண்ட கொத்துத் தெங்கே!

பிஞ்சு வெள்ளரியே!

பேசும் வைகை! பாடும் பொன்னி!

பெருகும் கொள்ளிடமே!

தத்துச் செல்லாப் பத்துப் பாட்டே! தாலோ தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

8) தாலோ தாலேலோ!

வெண்ணா றாகி வெட்டா றாகி

விளங்கும் ஐயாற்றில்

வேதம் சூழும் நாதன் பாதம்

வேண்டிப் பாடியதால்

அண்ணா மலையாய்த் தண்ணார் தமிழில்

ஆற்றல் பெற்றோனே! ஆடிக் காற்றே! நாடி நரம்பே! ஐப்பசி மாமழையே!

وو

"பெண்ணின் பெருமை பேசும் திரு.வி. கல்யா ணப்பெரியோன்

பேணிப் பேசிப் பாடிப் பரவும்

பேழைச் செம்பொன்னே!

தண்ணீர்ப் பந்தல்! கண்ணீர்க் கோவில்!

தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

9) தாலோ! தாலேலோ!

அடிகளின் நிறம் வெள்ளை ஆகும்.

31

பெருகும் அடிகளின் கருத்து எங்கும் பெருகிப் பரவியது.

திருவையாற்று இறைவனிடம் அடிகளுக்கு ஈடுபாடு மிகுதி. அடிகளிடம் திரு.வி.க.அவர்கட்கு ஈடுபாடு மிகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/56&oldid=1594945" இலிருந்து மீள்விக்கப்பட்டது