உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் - 34

பெய்யென் றாலே பெய்யும் மழையே!

பேசும் கற்பகமே!

பிரள யத்தில் புரளும் மாலே! பேசா அற்புமே!

நெய்யும் தறியே! உய்யும் நெறியே! நீற்றின் நாயகமே!

நெற்றிக் கண்ணன் பற்றிக் கொண்ட

வெற்றிச் சிறுபறையே!

கையில் கோலும் மெய்யில் நீறும்

காட்சி அளித்தோனே!

கடிதம் கொண்டு தமிழில் வரைந்த

கன்னிக் கோகிலமே!

தையின் குளமே! பையின் வளமே!

தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்ந்தே!

10) தாலோ தாலேலோ!

அடிகள் எப்பொழுதும் நீறு பூசியிருப்பார்.

நெற்றிக் கண்ணன் = சிவன்.

அடிகள் மறைந்து சிவன் கையில் சிறுபறை ஆனாரோ?

அடிகள் எழுதிய நூல் “கோகிலாம்பாள் கடிதங்கள்' என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/57&oldid=1594946" இலிருந்து மீள்விக்கப்பட்டது