உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

4. சப்பாணிப் பருவம்

பொன்கோடி வந்தாலும் பொருள்கோடி தந்தாலும்

புலவோரில் ஒருவ னாகிப்

பொல்லாப்பும் இல்லாமல் புறம்பேசி நில்லாமல் பூத்துள்ள முகத்தி னோடு

கண்கோடி மொழிபேசக் கைகொடி நூல்தோயக்

கதையோடு புதினம் ஈந்து

காற்றுள்ள பொழுதிங்கே தூற்றிக்கொள் உலகத்தில்

கடையாணி ஆகி நின்று

புண்கோடி தாங்கியவா! புகழ்கோடி தேங்கியவா! புதையலாய் வந்த செல்வா!

பூச்சரமே! பாராட்டே! ஆச்சிமார் தாலாட்டே! புன்னகையால் வென்ற கண்ணே!

சன்மார்க்க நெறிபேசும் சங்கத்தின் வழிகாட்டி! சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

1) சப்பாணி கொட்டி அருளே!

புதினம் = நாவல்.

ஆச்சிமார் = செட்டிநாட்டுப் பெண்கள்.

அடிகளின் மேனிநிறம் தங்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/58&oldid=1594947" இலிருந்து மீள்விக்கப்பட்டது