உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

❖ 34❖ மறைமலையம் - 34

தங்கத்துப் பொன்மேனி தமிழுக்கு விண்மாரி

தலைமைக்கு வேந்த னாகித்

தரைகெட்ட பாலையிலும் தமிழ்கெட்ட காலையிலும்

தனித்தமிழ் பொங்கி நின்று

சிங்கத்தின் உருவாகி வங்கத்தின் புனலாகிச்

சிறுமைகள் தீர்த்த தாலே

சீராட்டி வந்ததமிழ் நீராட்டி வந்தவனே!

சீதனமாய் வந்த செல்வா!

சுங்கத்து வரிநீக்கும் சோழற்குப் பின்வந்து

சோதனை தீர்த்த மன்னா!

சுவைதேங்கு தமிழுக்குச் சுமைதாங்கி ஆனவனே! சொல்மாரி பெய்த வேதா!

சங்கத்துப் புலவோராம் சிங்கத்தில் ஒருவன்நீ சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

2) சப்பாணி கொட்டி அருளே!

ஈன்றோர்கள் கீர்த்திக்கும் இருந்தோர்கள் சீர்த்திக்கும் இம்மையில் பணிகள் செய்தே

ஈசனைக் கண்டவா! தாசரைக் கொண்டவா

இயலிசைக் கூத்து மன்னா!

ஆன்றோர்கள் தமிழிலே தோன்றாத நாளிலை

அத்தனை புலவ ருள்ளும்

அகம்புறம் இலக்கணம் அருள்நிறை இலக்கியம்

ஆயிரம் கற்ற தாலே

“சுங்கம் தவிர்த்த சோழன்ஞ” குலோத்துங்கன் ஆவான். அவன் சுங்கவரி நீக்கியதால் சோதனை நீங்கியது.

அதுபோல் மறைமலை அடிகளின் தொண்டால் தமிழுக்கு ஏற்பட்ட சோதனை நீங்கியது.

வேதா = பிரமன் & வேதாசலம் (மறைமலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/59&oldid=1594948" இலிருந்து மீள்விக்கப்பட்டது