உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் தான்றோன்றி நாதனின் தமிழூன்று பாதமே தலைக்கணி யாக ஏந்தித்

தனித்தமிழ்க் கடலிலே புதுக்கலம் செலுத்தியே தாரணி வென்ற மைந்தா!

சான்றோர்கள் உலகத்தில் ஆன்றோனாய் வந்தவா! சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 3) சப்பாணி கொட்டி அருளே!

கதைஉருவாம் தமிழ்நிலத்தில் புதைபொருளாய் அவதரித்துக் கற்பனை கோடி செய்து

கலைமணக்க எழுதியதும் நிலைமணக்கப் பேசியதும் காற்றிலே தோய்ந்த தாலே

உதைகொடுத்த பகைவர்க்குச் சிதைஎடுக்க வீரமனம் உற்றனர் தமிழ மாந்தர்.

ce

உல்லாச புரிதேடிச் சல்லாப மொழிபேசி உறங்கிய வாழ்வு போதும்”

"எதையிழந்த காலத்தும் தமிழ்இழக்க மாட்டார்கள்

என்பதை நிலைநி றுத்த

وو

இறுதியாய் உலகிற்கே உறுதியாய்ச் சொல்லவே எழுந்திவண் வந்த பாலா!

சதை வளர்க்கும் உலகத்தில் விதைவளர்க்க வந்தவனே! சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

4) சப்பாணி கொட்டி அருளே!

35

இறைவன் தானாகத் தோன்றியவன். அவனது பாதத்தில் படைக்கப் பெற்றுள்ள தமிழைத் தன் தலையில் ஏந்தி பணிபுரிந்தவர் அடி கள்.

தமிழர் தம் வீர உணர்வையும் மொழி உணர்வையும் தட்டி எழுப்பியவர் அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/60&oldid=1594949" இலிருந்து மீள்விக்கப்பட்டது