உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 34

-

ஈன்றாளும் தந்தையுமாய்த் தோன்றாத துணையாகி

இருக்கின்ற சிதம்ப ரேசன்

இணையடிகள் பிறவிக்குப் புணையெனவே கொண்டதனால் இம்மையிலே புகழில் ஏறி

வான்றோய்ந்த முகிலுக்கும் வளம்தோய்ந்த பயிருக்கும்

வாய்த்திட்ட நட்பு போல

வற்றாத தமிழுக்கு நற்றாயாய் வந்தவனே! வடமொழியும் கற்ற வள்ளல்!

ஊன்றாத கோலுண்டா? உதவாத நூலுண்டா? உலவாத காலும் உண்டா?

உணராத உலகத்தில் ஊன்றுகோல் நூலாகி உயர்காலாய் வந்த பாலா!

சான்றோர்கள் உலகத்தில் ஆன்றோனாய் வந்தவனே! சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 5) சப்பாணி கொட்டி அருளே!

பஞ்சமா பாதகங்கள் கொஞ்சமா உலகத்தில்?

பரமேசன் உலகில் வந்தால்

படித்தோர்கள் மத்தியிலும் நடித்தோர்கள் மத்தியிலும் படைஏந்தி வாழ வேண்டும்.

தஞ்சமாய் வந்தோர்க்குத் தஞ்சையாய் வாழ்ந்தவர்கள் தாராளம் கெட்ட தாலே

தமிழுக்கும் நீரில்லை, தகுதிக்கும் ஆளில்லை தலைமைக்கும் வேலை இல்லை.

அன்னையும் அப்பனுமாய் உள்ள தில்லை நடராசப் பெருமானை வழிபட்டதால் அடிகள் இம்மைப் புகழ் பெற்றார். கால் = பாதம் & காற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/61&oldid=1594950" இலிருந்து மீள்விக்கப்பட்டது