உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் புஞ்சையாய்ப் போனதெலாம் நஞ்சையாய் மாற்றிடவே புகலாகி வந்த புத்தா!

புனலாகித் தமிழர்க்கு நனவாகி வந்ததனால் போராட்டம் தீர்த்த புனிதா!

சஞ்சலங்கள் இரிந்தோட சபையோர்கள் மகிழ்ந்தாட சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 6) சப்பாணி கொட்டி அருளே!

எக்காள மிட்டவர்கள் செக்காக நின்றவர்கள் எல்லோரும் அஞ்சி ஓட

இயல்பான மொழிபேசி நயமான பொருள்கூறி இணையற்ற பாணி யாலே

அக்காலப் புலவோரும் இக்காலப் புலவோரும்

பொற்காலம் என்று போற்ற

அரசாங்க மரியாதை சிரசாலே செய்தோங்க ஆன்மீகம் தந்த பாலா!

அக்கார வடைசலுடன் உக்காரும் பாயசமும்

அல்வாவும் போல வந்தே

அவைதோறும் பரிமாறி சபைதோறும் நடமாடி அமுதாகி நின்ற ஐயா!

சர்க்கரை இப் பந்தலிலே தேன்மாரி கொட்டியவா!

சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

7) சப்பாணி கொட்டி அருளே!

37

தமிழர்க்குப் புத்தராகவும் புனிதராகவும் அவதரித்தவர்

மறைமலை அடிகள்.

அக்கார வடைசல், உக்காரு,

தமிழ்நாட்டின் இனிப்பு உணவுகள்.

பாயசம்,

அல்வா

||

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/62&oldid=1594951" இலிருந்து மீள்விக்கப்பட்டது