உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

❖ 34❖ மறைமலையம் - 34

போதனைகள் ஒருகோடி புலவோர்கள் பலகோடி

பூத்திட்ட பொய்கை ஆகிப்

புறங்கண்ட புலவோர்கள் அகங்கண்டு பாராட்டப் புதையலாய் வந்த தாலே

சாதனைகள் ஒருகோடி சன்மார்க்க நெறிதேடிச் சரித்திர மனித னாகிச்

சலியாத உழைப்பீந்து மெலியோர்கள் பிழைப்பீந்து சான்றோனாய் வந்த சாதே!

வேதனைகள் தீர்த்தோனே! வெற்றிமுர சார்த்தோனே! வீரங்கள் ஒன்று கூடி

விளையாடு முருகாகி மழையாடு புனலாகி வினையாட வந்த வீரா!

சாதகமாய் நின்றோனே! பாதகங்கள் வென்றோனே! சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

8) சப்பாணி கொட்டி அருளே!

எலியாகி அறுத்தோரும் புலியாகி ஒறுத்தோரும் ஏராள மான நாட்டில்

எண்ணங்கள் புரியாமல் இதயங்கள் விரியாமல் ஏதேதோ பேசி வந்தார்.

கலிகாலம் என்றேங்கி ஒலியாவும் கேட்டார்கள்

கனிவான தமிழ நாட்டார்,

கடைகெட்ட காலத்தில் நடைபோட்டு வந்திங்கே

கலிமாற்றி விட்ட கண்ணா!

பொய்கையாகவும், புதையலாகவும், சான்றாண்மை மிக்க

சாது ஆகவும் வாழ்ந்தவர் அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/63&oldid=1594952" இலிருந்து மீள்விக்கப்பட்டது