உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் நலிவுற்ற துறையாவும் பொலிவுற்ற மறையாகி

நடமாட வைத்த தாலே

நயனங்கள் மொழிகாட்டப் பயணங்கள் வழிகாட்ட நாதனாய் வந்த வேதா!

சலியாத உளம்கொண்டு மெலியாத உடல்கொண்டு சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 9) சப்பாணி கொட்டி அருளே!

பத்திநெறி இம்மைக்கும் முத்திநெறி மறுமைக்கும் பயனுள்ள பாதை என்றே

படியாத பேர்கட்கும் நடியாமல் வழிசொல்லிப் பணிசெய்ய வந்த தாலே

கத்திமுனை போல்வாழ்ந்து புத்திமுனை தேயாமல் கண்ணாடி நெஞ்ச முற்றுக்

கலைகண்ட உலகத்தில் நிலைகண்ட புகழ்தேடிக்

கற்றோர்கள் தலைவ னாகி

அத்தியெனப் பூத்ததமிழ் மத்தியிலே பாமரர்க்கும் ஆலவிழு தாக வந்தே

அழகான மொழிபேசி நிழலாக உருவாகி ஆனந்தம் ஈந்த ஐயா!

சத்தியமே வெற்றியென நித்தியமும் பற்றியவா!

சப்பாணி கொட்டி அருளே!

சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே!

10) சப்பாணி கொட்டி அருளே!

39

மக்களுக்குப் புரியும்படியாகப் பேசியவர் மறைமலை

அடிகள்.

நடிக்காமல் உண்மையாக வாழ்ந்தவர் அடிகள்.

அவருடைய நெஞ்சம் கண்ணாடி போன்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/64&oldid=1594953" இலிருந்து மீள்விக்கப்பட்டது