உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

5. முத்தப் பருவம்

மத்தாக மந்தரமும் கயிறாக வாசுகியும்

பாற்கடலைக் கடைந்த போது

மணமிக்க நல்லமுதும் சினமிக்க தீநஞ்சும் மண்டியே வந்த காலை

அத்தா” என் றமரர்களும் "அப்பா" என் றசுரர்களும் அலறியே நின்ற தாலே

ஆலமுடன் அமுதத்தைக் கோலமிகு கண்டத்தில் அடக்கிய கால கண்டன்

சொத்தாக வீற்றருளும் திருநாகைக் காரோணச்

சோழியச் சொக்க நாதர்

சோர்விலாச் சின்னம்மை மார்பிலே தவழ்ந்தவர்

சொல்வளம் பெற்ற செல்வா!

முத்தான முத்தமிழை மொத்தமாய் மொழிந்தநல் வாயாலே முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே

1) முழுநிலா முத்தம் தருகவே!

காலகண்ட ன் = சிவபெருமான்.

66

சிவபெருமான் நாகைப்பட்டினத்துக் 'காரோணம்” என்னும் கோயிலில் வீற்றிருக்கிறார். நாகையைச் சேர்ந்த காடம்பாடி எனும் கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மைக்கும் 15-7-1876 இல் பிறந்தார். மறைமலை அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/65&oldid=1594954" இலிருந்து மீள்விக்கப்பட்டது