உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

பொதுவான தமிழ்நூல்கள் சிவஞான போதமுடன்

புராணங்கள் யாவும் கற்றுப்

புலமைக்கும் தமிழ்ஞானத் தலைமைக்கும் வேரூன்றிப் பொழிவுகள் செய்த தோடு

மதுரைநா யகம்பிள்ளை மனம்கொண்ட தொடர்பாலே மாண்புகள் பலவு முற்று

மனோன்மணி சுந்தரம் பிள்ளையின் ஆசியால் மார்த்தாண்டன் தம்பி கண்ட

பொதுநிலைப் பள்ளியில் தமிழ்த்துறைப் பணியிலே புலமையும் சிறிது காட்டிப்

புகழ்திரு வனந்தனது புரத்திலே பலமுறை பொழிவுகள் செய்த புலவா!

முதுகுன்றாம் கழுக்குன்றப் பெருமானால் வந்தநல் வாயாலே முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே!

2) முழுநிலா முத்தம் தருகவே!

சித்தாந்தப் புலவனாம் சிற்றம் பலவனாம்

சீர்காழிப் புலமைச் செல்வன்

செய்ததுக ளறுபோத நூலுக்கு நல்லுரை

செப்பியே புகழில் ஏறிச்

சித்தாந்த தீபிகைத் திங்களிதழ் ஆசானாய்ச்

சிலதிங்கள் தொண்டு செய்து

சிவஞான சித்தியார் பதினான்கு செய்யுட்குச் செம்மையாய் உரைகள் தீட்டி

மிகச்

ன்

41

அந்நாளில் மதுரை நாயகம்பிள்ளை சிறந்த சைவப்புலவர். அவரது தொடர்பால் அடிகள் புகழ்பெற்றார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஆதரவால் அடிகள் 1896 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் சென்று மார்த்தாண்டன் தம்பி என்பவர் நடத்திய பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பொது மக்களுக்குப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருக்கழுக்குன்றப் பெருமானைத் தாய் தந்தையர் வணங்கியதால் அடிகள் பிறந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/66&oldid=1594955" இலிருந்து மீள்விக்கப்பட்டது