உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 34 *

முத்தான மந்திரம் முப்பத்து பாட்டுக்கு

மூலமாய் உரைகள் தீட்டி

மூலைகள் தோறுமே சித்தாந்த தீபிகை முழங்கவே முனைந்த முதல்வா!

முத்தான முத்தமிழை மொத்தமாய் மொழிந்தநல்

3)

வாயாலே முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! முழுநிலா முத்தம் தருகவே!

கீர்த்திமிகு சென்னையில் கிறித்தவக் கல்லூரி

கிளர்ந்திடப் புலவ னாகிக்

கேண்மைமிகு பரிதிமாற் கலைஞருடன் தொண்டாற்றிக் கேட்டவர்ப் பிணிக்கு மாறு

வார்த்தைகள் உரைநயம் குரல்நயம் வாய்ந்திட வாய்மையாய்த் தொண்டு செய்து

வற்றாத தமிழ்க்கூடம் கிறித்தவக் கலைக்கூடம் வையகம் போற்று மாறே

ஈர்த்ததும் ஆங்கிலக் கட்டுரை பேர்த்ததும்

எடிசனின் நூல்க ளாக

இதயங்கள் கவர்ந்ததும் மொழிபெயர்த் துயர்ந்ததும் எத்தனை கோடி ஐயா!

மூர்த்தியாய் வந்துதமிழ்க் கீர்த்தியை மொழிந்தநல் வாயாலே முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே!

4) முழுநிலா முத்தம் தருகவே!

சீர்காழிச் சிற்றம்பலப் புலவர் எழுதிய “துகளறுபோதம்” எனும் நூலுக்கும், “சிவஞான சித்தியார்” பதினான்கு செய்யுட்கும், “திருமந்திரம்" முப்பது பாடல்களுக்கும் அடிகள் உரை எழுதினார். “சித்தாந்த தீபிகை” என்னும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

66

“பரிதிமாற் கலைஞர்” எனப்படும் வி.கோ.சூ. அவர்களுடன் அடிகள் 1896 ஆம் ஆண்டு முதல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 13 ஆண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தார். ஆங்கில நூல்கள் பலவற்றையும், எடிசனின் நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/67&oldid=1594956" இலிருந்து மீள்விக்கப்பட்டது