உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் - 34

உருவுடன் வெளிவர எழுதுகோல் தீட்டிய ஒப்பிலா ஓவி யங்கள்

உலகினை ஈர்த்ததும் உன்புகழ் ஆர்த்ததும் உன்னவோ கசியும் உள்ளம்!

முருகரின் மும்மணிக் கோவையைப் பாடிய வாயினால் முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே!

6) முழுநிலா முத்தம் தருகவே!

செக்கினை இழுத்தவன் கப்பலை ஓட்டியே செம்மாந் திருந்த புலவன்

சிதம்பரன் தன்னையே உறுப்பினன் ஆக்கியே

சீர்மிகும் ஞானசா கரத்தினைத்

திக்கெலாம் பரப்பியே துக்கடா இதழ்களைத்

தீர்த்தநற் சேவை யாலே

தெளிவுரை விரிவுரை திருவா சகஉரை

தீந்தமிழ் நாடு கொள்ளச்

சிக்கெனப் பிடித்தமா ணிக்கவா சகரது

சீர்மிகு காலஆ ராய்ச்சியும்

சிவமதம் காப்பியம் இலக்கணம் ஆராய்ச்சி

செய்ததும் கோடி ஆகும்.

66

திருவொற்றி முருகன் அருளால் கொடிய நோயினின்றும் பிழைத்ததால் அடிகள் திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” எனும் நூலை 1899 ஆம் ஆண்டில் பாடினார்.

குருவாகிய நாயகர் 22 -2-1901 இல் மறைந்ததால் அவர் மீது “சோமசுந்தரக் காஞ்சி” எனும் நூலை அடிகள் பாடினார்.

ஞானசாகரம் (அறிவுக்கடல்) எனும் மாத இதழை அடிகள் 1904 ஆம் ஆண்டில் தொடங்கி நிறைய எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/69&oldid=1594958" இலிருந்து மீள்விக்கப்பட்டது