உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் முக்கியம் தமிழெனத் திக்கெலாம் மொழிந்தநல் வாயினால் முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 7) முழுநிலா முத்தம் தருகவே!

சிறுவனாய் ஐயொரு மூன்றெனும் ஆண்டிலே செந்தமிழ் பயில வந்து

திருக்குறள். தொல்புகழ்க் காப்பியம், காரிகை,

சிற்றம்ப லக்கோ வையும்,

பொறுமையாய்ப் பெரியதாம் புராணமும், கல்லாடம், புகழ்கலித் தொகையுடன், சிலம்பும், பொற்புடை நாலடி, புகழ்பத்துப் பாட்டுடன்,

பூத்தநன் னூல்வி ருத்தி,

திருமிகு சிவஞான போதமும், சித்தியும்,

தீந்தமிழ்த் தண்டி யோடு,

தெய்வமாம் இறையனார் அகப்பொருள் உரையுடன்,

சிந்தா மணியும்ஆ றாண்டில்

முருகனாய் வளர்ந்திவண் நெட்டுருச் செய்தநல்

வாயினால் முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே!

8) முழுநிலா முத்தம் தருகவே!

66

45

அடிகள் தொடங்கிய ஞானசாகரம்' மாத இதழுக்கு வ.உ.சிதம்பரனார் அவர்களும் சந்தா செலுத்தி உறுப்பினர்

ஆனார்.

அடிகளின் "மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி” எனும் நூல் புகழ்பெற்றது ஆகும்.

ஐயொரு மூன்று = 15.

அடிகள் தமது 15ஆம் வயதில் தமிழ்நூல்களை மனப்பாடம் செய்யத் தொடங்கினார். ஆறே ஆண்டுகளில் மேற்கண்ட நூல்களை நெட்டுருச் செய்து முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/70&oldid=1594959" இலிருந்து மீள்விக்கப்பட்டது