உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் - 34

சித்தாந்த சிவசபைத் தலைவனே! சென்னையில்

திருவருட் பிரகாச சபையும்

மெய்கண்ட சந்தான சபையுடன் நாகையில்

மேலான மலைக்கோட் டையில்

முத்தான தஞ்சையில் தூத்துக் குடியினில் மூலைகள் தோறும் எல்லாம்

முழுமுதற் சிவபரம் பொருளினைப் பற்றியே மொழியசித் தாந்த சபைகள்

கொத்தாக முளைத்திடச் சிதம்பரச் சபையினில் குவலயம் போற்று மாறு

கொழும்பிலே உள்ளவர் ராமநா தத்துரை கொழிதமிழ்த் தலைமை ஏற்க

முத்தான முதல்மாநா டாக்கியே மொழிந்தநல் வாயினால் முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே

9) முழுநிலா முத்தம் தருகவே!

அடுத்தமா நாட்டினைப் பாண்டித்து ரைத்தேவர் ஆன்றதோர் தலைமை தன்னில்

அருளுக்கு வழிகாட்டும் அம்பல வாணன்தான் அழகாடும் சிதம்ப ரத்தில்

66

ப"

1905 -ஆம் ஆண்டில் அடிகள் சைவசித்தாந்த சபை தாடங்கி அதன் தலைவரானார். இதற்கு நாடு முழுதும் கிளைகள் தோன்றின. சென்னையில் திருவருட்பிரகாச சபை, மெய்கண்ட சந்தான சபை ஆகியன கிளைகள் ஆகும். நாகை, திருச்சி, (மலைக்கோட்டை), தஞ்சை, தூத்துக்குடி, சிதம்பரம் ஆகிய பல ஊர்களில் கிளைகள் தோன்றின. சிதம்பரத்தில் 1906 -

ஆம் ஆண்டில் அடிகளால் முதல் மாநாடு சிறப்பாக

நடத்தப்பெற்றது. கொழும்பு இராமநாதத் துரை தலைமை தாங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/71&oldid=1594960" இலிருந்து மீள்விக்கப்பட்டது