உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ்

அரு. சோமசுந்தரன்

எடுத்தபின், மூன்றம்மா நாட்டினை நாகையில்

ஈடிலா நல்லு சாமி

எழில்தலைமை கொள்ளவே முடித்தபின் திருச்சியில் இணையிலா நான்காம்மா நாட்டை,

கொடுத்துயர் யாழ்ப்பாணக் கனகமாம் சபைப்புலவர் கொழிதமிழ்த் தலைமை கொள்ளக்

குணமுடன் மாநாடு பலகண்டு செயலாற்றிக் குவலயம் போற்று குமரா!

முடித்திடா உரைகளைத் தொடுத்துளம் கவர்ந்தநல் வாயினால் முத்தம் தருகவே!

மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே!

10) முழுநிலா முத்தம் தருகவே!

47

இரண்டாம் மாநாடு சிதம்பரத்தில் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் மாநாடு நாகையில் நல்லுசாமிப் பிள்ளை தலைமையிலும, நான்காம் மாநாடு திருச்சியில் யாழ்ப்பாண வள்ளல் கனகசபைப் புலவர் தலைமையிலும் நடைபெற்றன. எழுதத் தொடங்கி முடிக்காத பல உரைகளை அடிகள் பேச்சில் வெளிப்படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/72&oldid=1594961" இலிருந்து மீள்விக்கப்பட்டது