உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

6. வாரானைப் பருவம்

கண்டோர் கரம்குவிய உண்டோர் மனமகிழக்

கற்பூரச் சொல்லோ வியங்கள்

கடலாடு சென்னைமுதல் அலையாடு குமரிவரை

கன்னித் தமிழ்மாந்தர் கேட்க

செண்டோ எனவாகி, வண்டோ எனமக்கள்

செந்தமி ழால்சுற்றி நிற்க

சீரோடு தளைதோய நாரோடு மலர்தோய

செம்பவள வாய்தி றந்து

தொண்டோ, பொதியமலைத் துண்டோ எனுமாறு

தொல்லரிய தமிழை ஈந்து

தூய்மைக்கும் தமிழ்ப்புலவர் வாய்மைக்கும் சான்றாகத் தோள்தட்டி வந்த செல்வா!

பண்டோர் அகத்தியனைக் கொண்டோர் உருவமெனப் பைந்தமிழ் தனைப்பருக வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

1) பச்சைக் குழந்தாய் வருகவே!

சன் சன்னை

முதல்

குமரி

வரை

அடிகள்

சொற்பொழிவாற்றினார். பூச்செண்டாக அவர் திகழ மக்கள் அவரை வண்டாகச் சுற்றினர். தமிழ் பிறந்த பொதிய மலையின் ஒரு துண்டு போல மறைமலை தொண்டு செய்தார். அகத்தியனின் மறுபிறவியாக வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/73&oldid=1594962" இலிருந்து மீள்விக்கப்பட்டது