உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

-

மறைமலையம் - 34 *

நிட்டை பயிலாமல் நீரில் துயிலாமல்

நீண்ட தமிழ்த்தவமே பூண்டு

நித்தம் நடந்தோடி சித்தம் கவிபாடி

நெக்கு நெக்கெனவே உருகிக்

குட்டை குளங்களென மட்டை மரங்களெனக் குந்தி யிருந்ததமிழ் மாந்தர்

குன்று போல்நடந்து வென்று மிகஉயரக் கோடி ழுக்கவந்த குமரா!

பட்டைத் திருநீறும் சுற்றித் துறவாடை பண்டைத் தமிழ்ப்புலவா! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

3) பச்சைக் குழந்தாய்! வருகவே!

பண்பில் சவுந்தரமோ பழகப் பொன்னம்மாள் பாசக் கண்ணம்மாள் என்று

பண்டு முத்தாரம் கொண்ட நாதனெனப் பாரில் இல்லறமே பூண்டு

நண்பில் திருவரங்கம் செந்தில் ஆறுமுகம்

நல்ல பெரியநா யகமும்

நாளும் உதவிசெயும் வைரவ நாதபிள்ளை நற்றெய்வ நாயகமும் ஆகி

அன்பால் பொருளுதவி நின்பால் செய்திடவே அச்சுத் தொழிற்கூடம் கண்டே

ஆரா தனைசெய்ய நீராய் மைஊற்றி

அச்சுப் பூப்பொட்டு நித்தம்

நீரிலும் நெருப்பிலும் தவம் புரியாமல் தமிழ்த் தவம்பூண்டு மக்கட்பணி புரிந்தவர் அடிகள்.

சவுந்தரம்மாள், பொன்னம்மாள், கண்ணம்மாள் என்ற மூன்று தாரம் அடிகட்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/75&oldid=1594964" இலிருந்து மீள்விக்கப்பட்டது