உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் பண்பால் தமிழ்த்தாயை அன்பால் வணங்கிடவே பைய நடைபோட்டு வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 4) பச்சைக் குழந்தாய் வருகவே!

சிந்தா மணியினொடு நந்தா நீலாம்பிகை ஞான சம்பந்தன் மணிவாசகம் திருநா வுக்கரசு பெருநாச் சுந்தரம் திரிபுர சுந்தரி யோடு

முந்து முதல்மனைவி தந்து வளர்செல்வம் முனைஅம் பலவாணன் கலாவதி மூத்த பச்சையப்பன் ஏத்து சொக்கம்மாள் முயன்று தமிழ்வளர்க்க ஈந்தோய்!

மந்தா கினிபோல சிந்தா மணியோடு மக்கட் செல்வங்கள் கோடி!

மழையோ எனுமாறு தழையும் தமிழுக்கு மாண்பாய் உவந்தளித்த தாலே

பந்தாய்க் குதியாமல் நந்தாய் ஒளியாமல்

பாகாய் மழலைதர வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

5) பச்சைக் குழந்தாய்! வருகவே!

51

கொழும்பில் வாழ்ந்த திருவரங்கனார், செந்தில் ஆறுமுகம் பிள்ளை, பெரியநாயகம் பிள்ளை, வைரவநாத பிள்ளை, தெய்வநாயகம் பிள்ளை ஆகியோரின் பொருள் உதவியால் அடிகள் /“திருமுருகன் அச்சுக்கூடத்தைத்” தொடங்கினார்.

=

சவுந்தரவல்லி அம்மாள் பெற்ற குழந்தைகள் சிந்தாமணி, நீலாம்பிகை, ஞானசம்பந்தன், மணிவாசகம், திருநாவுக்கரசு, சுந்தரம், திரிபுரசுந்தரி ஆகிய எழுவர்.

கலாவதி ஆகிய இருவர்.

பொன்னம்மாள் பெற்ற குழந்தைகள்

=

அம்பலவாணன்,

கண்ணம்மாள் பெற்ற குழந்தைகள்

=

பச்சையப்பன்,

சொக்கம்மாள்.

மந்தாகினி = கங்கை. நந்து = சங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/76&oldid=1594965" இலிருந்து மீள்விக்கப்பட்டது