உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 34 * -

கல்விப் பணியோடு சைவப் பணிசெய்யப்

கச்சை கட்டிவந்த தாலே

கற்றுத் துறைபோய முப்பத் தைந்தாண்டில் காவி மனம்படைத்த வள்ளல்

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே எனநிறுவிச் சொக்கன் பதம்பணிந்து பாடிச்

சோர்வு சிறிதுமின்றி ஊர்கள் பலவுமுற்று சுற்றி இலங்கையிலும் வந்து

நல்லார் பலர்உறவும் வல்லார் பலர்தொடர்பும் நாடிப் பெற்றதனால் எங்கும்

நல்ல தனித்தமிழை வெல்ல வழிஅமைத்து நாட்டில் பரப்பவிதை வித்திப்

பல்லார் கரம்குவிக்க வல்லார் சிரமசைக்கப் பச்சைக் கற்பகமே! வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

6) பச்சைக் குழந்தாய்! வருகவே!

பாகும் கனியதமிழ் பாடும் வள்ளலது

பாடல் அருட்பாவில் மூழ்கிப்

பண்ணில் குழையபெரு விண்ணில் உள்ளவரும்

பக்கம் இருந்துதமிழ் கேட்க

நாகும் பால்மறக்க நாதம் யாழ்மறக்க

நாடும் செயல்மறந்துமு நிற்க

நல்ல அம்பிகையாம் வல்ல தமிழ்நீலா

நாடி ஒருகேள்வி கேட்கத்

அடிகள் தமது முப்பத்தைந்தாம் ஆண்டில் (1911 -ஆம் வருடத்தில்) துறவுபூண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/77&oldid=1594966" இலிருந்து மீள்விக்கப்பட்டது