உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் “தேகம்” என்றவட சொல்லை நீக்கிஅதில்

“யாக்கை” என்றசொல்லைப் பெய்தால் தேனில் கலந்ததொரு பாலைப் போலினிமை தேக்கும் தனித்தமிழே என்னப்

பாகு தனித்தமிழைப் பாரில் பரப்பவரு பச்சைப் பசுங்கிளியே! வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 7) பச்சைக் குழந்தாய்! வருகவே!

பெருவா சகங்களிலெலாம் திருவா சகத்தினது பெருமை தனையறியார் யாரோ?

பேணி அதற்குரைகள் காணின் உடன்வீடு பெறுவர் எனும்உரையும் பீடோ?

திருவா சகத்தினுரை தீட்டி முடியுமுனே

தென்றல் நடைபயிலும் ஆசான்

தென்னர் புகழவரும் அண்ணா மலைக்கழகத்

தேசம் புகழும்கதி ரேசன்

பெருவான் புகுந்தகதை கருவாய் உள்ளவரும் பேசித் தெரிந்தகதை அன்றோ?

பீடு தனித்தமிழில் நாடு மகிழ்ச்சிகொளப் பேழைக் களஞ்சியத்தில் நித்தம்

53

1911-ஆம் ஆண்டில் ஒருநாள் அடிகள் “பெற்ற தாய்தனை என்ற திருவருட்பாப் பாடலை இனிமையாய்ப் பாட, அதைக் கேட்ட அவரது மகள் நீலாம்பிகை அப்பாடலில் உள்ள “தேகம்” என்ற வடசொல்லுக்கு பதிலாக “யாக்கை” என்ற தமிழ்ச்சொல் இருந்தால் மேலும் இனிமையாக இராதா? என்று கேட்டதனால், அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/78&oldid=1594967" இலிருந்து மீள்விக்கப்பட்டது