உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

-

மறைமலையம் -34 *

பருக விரிவுரைகள் திருவா சகம்பெறவே பச்சைப் பசுங்குதலாய்! வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

8) பச்சைக் குழந்தாய்! வருகவே!

கல்லா திருந்தவரும் சொல்லா திருந்தவரும் கடவுள் நிலையறிய வேண்டிக்

கற்ற மனத்துடனே முற்ற முழுத்துறவில் கண்ட கடவுள்நிலைக் கொள்கை

எல்லாக் கடவுளரும் ஒன்றே எனும்பொதுமை ஏற்ற கொள்கை எனக் கூறி

எங்கும் சாதிமத பங்கம் இல்லையதில்

ஏற்ற ஒழுக்கம் அருள் அன்பு

நல்ல தனித்தமிழில் வல்ல நடையதனில் நாளும் வழக்குமுறை கொள்ள நாட்டில் பொதுநிலைமை கூட்டக் கழகமென நாடி உருவமைக்க ஓடிப்

'திருவாசகத்திற்கு உரை எழுதுவோர் அது முடியுமுன் முக்தி பெறுவர்” என்பது பழமொழி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் திருவாசக உரை எழுதத் தொடங்கி அது முடியுமுன் மறைந்தார்கள். மறைமலை அடிகள் 1920 பிப்ரவரி முதல் 22 ஏப்ரல் வரை தாம் நடத்திய “செந்தமிழ்க் களஞ்சியம்” எனும் மாத இதழில் திருவாசகம் முதல் நான்கு அகவலுக்கு உரை எழுதினார். உரை முற்றுப் பெறவில்லை.

-

1910 ஆம் ஆண்டில் அடிகள் "பொதுநிலைக் கழகம்” தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/79&oldid=1594968" இலிருந்து மீள்விக்கப்பட்டது