உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் பல்லா வரத்திலொரு கழகம் அமைக்கவரு பச்சை மரகதமே! வருகவே!

பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

9) பச்சைக் குழந்தாய்! வருகவே!

பொன்னில் உள்ளவனோ? கண்ணில் உள்ளவனோ? போற்றும் அருட்பாவில் தானோ?

பூசைப் பொருள்களிலோ? ஆசை மனங்களிலோ? பூவில் நீரில்மிதந் தானோ?

விண்ணில் உள்ளவனோ? மண்ணில் உள்ளவனோ? வீழும் மழைத்துளியில் தானோ?

வெற்றி முழவொலியில் சுற்றி ஆடுபவன் வேடம் உள்ளசுடு காடோ?

பண்ணில் உள்ளவனோ? பலத்தில் உள்ளவனோ? பாகும் கனியமொழி பாடின்

பதமும் சலிக்கஉயர் மதமும் தழைக்கநடம் பயிலும் தில்லைநட ராஜன்

பண்ணில் திளைக்கதமிழ்ப் பல்லா வரத்திலொரு கோயில் படைக்கவென வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு

10) பச்சைக் குழந்தாய்! வருகவே!

அதன் கொள்கைகள்:-

1) ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

2) அன்பு அருள் ஒழுக்கம்.

3) தனித் தமிழ்.

55

நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில் இருக்கிறாரா? அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இடங்களிலா? அத்தகு நடராஜப் பெருமானுக்கு மறைமலை அடிகள் பல்லாவரத்தில் பொதுநிலைக் கழக மாளிகையில் “அம்பலவாணர் திருக்கோயில்” கட்டி நால்வர் படம் வைத்து 2-2-1931 இல் குடமுழுக்குச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/80&oldid=1594969" இலிருந்து மீள்விக்கப்பட்டது