உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

7. அம்புலிப் பருவம்

கண்ணைக் கவர்தலிலே உன்னைப் போலொருவன் கன்னித் தமிழி லுள்ளான்

கலைகள் பலநிறைந்து நிலைகள் பலவளர்ந்து கருத்தில் அமுதம் உள்ளான்.

மண்ணில் உள்ளவரை மயக்கும் அழகுடையான் மதியும் உச்ச முள்ளான்

மல்லி கைபோல வெள்ளி மீன்சூழ

மாலை விண்மீன்கள் கொண்டாய்!

எண்ணில் இங்கவனும் மல்லி கைமாலை இனிய மேடைகளில் சூடி

இதயம் கவர்ந்துலகில் உதயம் ஆவதனால் இவனும் உன்னவனே ஆவான்!

அன்னைத் தமிழ்வளரும் சென்னைத் தலைநகரில் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

1) அம்புலீ ஆட வாவே!

கண்ணைக்

கவர்தல், கலைகள் நிறைதல், நிலைகள்

வளர்தல், அமுதத்தோடு உடன்பிறத்தல், மயக்கும் அழகு, உச்சமதி, (விண்மீன்,மல்லிகை) மாலை சூடல், இதயம் கவர்தல், உதயமாதல் ஆகியவற்றில் சந்திரனும் மறைமலை அடிகளும் ஒப்புமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/81&oldid=1594970" இலிருந்து மீள்விக்கப்பட்டது