உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் -34 *

கடலில் மூழ்கிமந் தரத்தின் உதவியினால்

காட்சி கொடுத்துயர்ந்தாய் மதியே! கடலாய் தமிழில்இவன் திடமாய் மூழ்கிமந்

திரத்தால் வென்றதும் மதியே!

உடலில் உனக்குமொரு குறையும் உண்டெனவே உலகம் இன்றுவரை சொல்லும்

உடலில் இவனுமொரு கழலை நோயதனால் உலகில் மிகத்துயரம் கொள்ளும்.

கடலைக் கடந்துதினம் உலகைச் சுற்றிஒளிக்

கதிரைப் பரப்பிவரும் மதியே!

கடலைக் கடந்திவனும் இலங்கைத் தரணியதில்

கதிராம் அறிவொளிசெய் பதியே!

அடலில் வென்றவனாம் அடிகள் ஐயனுடன் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

5) அம்புலீ ஆட வாவே!

சந்திரன்

கடலில் இருந்து மந்தர மலை யின் உதவியால் பிறந்து வானில் உயர்ந்தது

முயற் கறை உடலில் உண்டு

கடலைக் கடந்து ஒளி பரப்புகிறது

அடிகள்

தமிழ்க் கடலில் மூழ்கி வடமொழி மந்திரங்கள் கற்று உயர்ந்தார். கழலை நோய் உண்டு. கடலைக் கடந்து இலங் கையில் அறிவொளி பரப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/85&oldid=1594974" இலிருந்து மீள்விக்கப்பட்டது