உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

-

மறைமலையம் - 34 *

தண்ட பாணிநட ராச னாரொடு

தமிழவ ளர்க்கும்சுப் பையாவும் தர்மாம் பாளொடு பண்டி தானந்தர் தழைத்த தும்இருவர் சொந்தமே!

மண்ட லத்தினையே வென்ற தோடும்ஒரு மணிமொ ழிக்குலம் கண்டதும்

மாத்தி ரையினில் நின்ற தோடும்தன் மானி என்றபேர் கொண்டதும்

சண்ட மாருதங்கள் கொண்டு வந்ததுவும்

சாதி பேதஇழை தகர்த்ததும்

சாத்தி ரங்கள்உயர் கோத்தி ரங்களெலாம் சாம ரைக்கவரி வீசவும்

அண்ட ரானஉயர் மதியை ஒப்புபவன் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

9) அம்புலீ ஆட வாவே!

இருவர் = சந்திரன் & அடிகள் சந்திரன்

தண்டபாணி (முருகன்) நடராசர் சுப்பையா, தர்மாம்பாள் (தர்மபுத்திரர்) ஆனந்தர் (நடராசர்) எல்லோரும் சந்திர பகவானுக்குச் சொந்தம். பூமண்டலத்தை ஒளியால் வென்றான் சந்திர குலத்தை உண்டாக்கினான்

மாத்திரைகள் சந்திரனைப்போல உருண்டை

தன்மானம் உடையவன்

சூறாவளியை உண்டாக்குகிறது

ஒளியில் சாதிபேதம் இல்லை

சாத்திரங்கள் எல்லாம் புகழ்கின்றன

அடிகள்

தண்டபாணி தேசிகர், டாக்டர் நடராசனார், வ.சுப்பையா பிள்ளை, டாக்டர் தருமாம்பாள், பண்டித ஆனந்தர் அடிகளுக்கு நண்பர்கள். புகழால் வென்றார்

"மணிமொழி நூலகம்" ஏற்படுத்தி 4000 நூல்கள் சேர்த்தார். எழுத்துக்கள் மாத்திரையில் சரியாக இருக்கும்

தன் மானி

தனித்தமிழ்ச் சூறாவளியை

உண்டாக்கினார்

சாதிபேதம் இல்லை

நூல்கள்,புலவர்கள் புகழ்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/89&oldid=1594978" இலிருந்து மீள்விக்கப்பட்டது