உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

8. சிற்றில் பருவம்

தென்னை மரத்தின் தேங்காயாய்த் திருப்பாற் கடலின் திரவியமாய்த் தேசம் போற்றும் அறிவியலாய்த் தெளித்த ஞானத் தெள்ளமுதாய்

மண்ணை வளர்க்கும் நல்லாறாய் மதியை வளர்க்கும் ஆசானாய் மாண்பை வளர்க்கும் வாசகமாய் மழையைப் பொழியும் மாமுகிலாய்ப்

பெண்ணைப் போற்றும் தமிழ்மறையாய்ப் பேணிக் காக்கும் மருத்துவனாய்ப் பிறந்து வளரும் தமிழ்மணியே! பேசிப் பூக்கும் மறைமலையே!

சென்னைப் பல்லா வரத்தினுயர் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 1) செல்வா! சிற்றில் சிதையேலே!

வாசகம் = திருவாசகம்.

தமிழ்மறை = திருக்குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/91&oldid=1594980" இலிருந்து மீள்விக்கப்பட்டது