உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

கானப் புள்ளாய் ஆனாயோ?

கடைசிப் பிள்ளை ஆனாயோ?

கந்தன் போல வந்தாயோ?

கன்னித் தமிழைத் தந்தாயோ?

ஞானப் பெருக்கில் சாதேவன் நட்பின் முறையில் சுக்ரீவன் நல்ல றத்தில் மாதர்மன்

நாளும் கொடையில் கோகர்ணன்

வானம் பாடி நீதானோ?

வாகை சூடி நீதானோ? வளரும் கீதை மொழிபோல வாழ்வில் மேதை ஆனோனே!

தேனில் தமிழைக் குழைத்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 2) செல்வா! சிற்றில் சிதையேலே! கண்ணின் நடுவே கருமணியே!

கதையின் நடுவே உயிர்இழையே! களத்தின் நடுவே தேர்த்தட்டில் காட்சி கொடுத்த கருமுகிலே!

எண்ணில் சிகரம் ஆனவனே!

எழுத்தில் அகரம் ஆனவனே! ஈடில் பக்தி ஓங்காரம்! இதயம் நீத்தாய் ஆங்காரம்!

கானப் புள் = காட்டுப் பறவை.

கடைசிப் பிள்ளைக்கு அறிவும் மதிப்பும் மிகுதி.

சாதேவன்

=

சகாதேவன்.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/92&oldid=1594981" இலிருந்து மீள்விக்கப்பட்டது