உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் மந்தா கிளியின் தண்ணீரோ?

வைகை நதியின் தமிழ்நீரோ? மலரும் பொன்னிச் சைவமதோ? மான சரோவார்ப் பொய்கையதோ?

சிந்தா மணியோ? மேகலையோ?

சிலப்பதி காரச் செழுஞ்சுவையோ? தேவா ரத்தின் இன்னிசையோ? திருவா சகத்தின் உள்ளுணர்வோ?

நந்தா விளக்கோ? நாயகமோ?

நாயன் மாரின் மறுபிறவியோ?

நாவக் கரசின் சொல்மழையோ? நற்றேன் பொழியும் மலைக்கொம்போ?

செந்தா மரையைப் பிழிந்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்த தவச் 5) செல்வா! சிற்றில் சிதையேலே!

வானில் தூவும் சரமழையோ?

மண்ணில் தூவும் உரமழையோ?

வளரும் கவிதை உரைமழையோ?

வையம் காக்கும் மறைமலையோ?

ஆனின் கணங்கள் காதாட்ட ஆடும் தென்றல் தாலாட்ட அசையும் பூக்கள் சீராட்டும்

அழகுக் கண்கள் சூழலிசையோ?

மந்தாகினி = கங்கை.

மானசரோவர்

=

இமயமலையில் உள்ள ஏரி.

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/94&oldid=1594983" இலிருந்து மீள்விக்கப்பட்டது