உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் - 34

-

ஊனில் உயிரில் கலந்துலவும்

ஒப்பில் அருட்பாத் தீஞ்சுவையோ?

உண்மை கண்ட சாக்கிரட்டீஸ்

உருவாய் வந்த புதியவனோ?

தேனில் பாலைக் குழைத்துதரும்

சிறுவா! சிற்றில் சிதையேலே!

6)

தேவா! தமிழர் செய்ததவச் செல்வா! சிற்றில் சிதையேலே!

நடரா சற்குக் கோயிலினை

நயமாய்க் கட்டி முடித்தவனே! நால்வர் படமும் வைத்தவனே! ஞானசாகரம்” அமைத்தவனே!

திடமாய் முருகன் அச்சகமும்

தீந்தமி ழுக்குச் செய்தவனே! திருவா சகத்தின் திருவுரைக்குச் “செந்தமிழ்க் களஞ்சியம்” படைத்தவனே!

புடம்போட் டுத்தமிழ் மொழிவளர்க்கப் “பொதுநிலைக் கழகம்” புரிந்தவனே! பொன்போல் “மணிமொழி நூலகத்தை”ப் போற்றி அமைத்த பூச்சரமே!

திடமாய் ஆக்கும் காலாலே

சிறுவா! சிற்றில் சிதையேலே!

தேவா! தமிழர் செய்ததவச் 7) செல்வா! சிற்றில் சிதையேலே!

கணங்கள் = கூட்டங்கள்.

அம்பலவாணர் கோயில், நால்வர் படம், ஞானசாகரம் இதழ், திருமுருகன் அச்சகம், செந்தமிழ்க் களஞ்சியம் இதழ், பொதுநிலைக் கழகம், மணிமொழி நூலகம் ஆகியன அடிகளின் ஆக்கப்பணிகள்,.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/95&oldid=1594984" இலிருந்து மீள்விக்கப்பட்டது